Pages

Wednesday, April 25, 2012

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கொத்தமல்லி


எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதனுடைய விதை, இலை ரெண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. இதன் விதை, காரம், கசப்பு, துவர்ப்பு, இனிப்புன்னு நான்கு விதமான சுவைகளும் சேர்ந்த அற்புதக்கலவை.

சாப்பிடும் போது காரச்சுவை கொண்ட இது, செரிப்பற்கு முன்  இனிப்புச்சுவையா மாறி, குடல் பகுதியில எரிச்சலைத் தணிக்குது.

உடல் எடையை குறைக்க கரும்பு சாப்பிடுங்கள்


குண்டான உடலை குறைக்க ஆண்களும், பெண்களும் பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். நடை பயிற்சி, கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் போன்றவற்றையும் வாங்கிச் சாப்பிட்டு, எப்படியாவது உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர்.

“பழச்சாறு குடித்தால் புற்றுநோய் ஏற்படும்” ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தகவல்


தினமும் காலையில் எழுந்ததும் பழச்சாறு குடிப்பது உடல் நலத்துக்கு உகந்தது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. தற்போது இது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. தினசரி பழச்சாறு சாப்பிடும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

செம்பருத்தியின் மகிமை

இது இந்தியாவில் தோட்டங்களில் வளர்க்கப்படுது. வேலித் தாவரமாகவும் வளர்க்கிறாங்க. இதோட நுனி இலைகள் பற்கள் போன்ற அமைப்புடன் காணப்படும். ஒளிர் பச்சை நிறத்தில் இருக்கும்.இதோட இலைகள், வேர் மற்றும் மலர்கள் பயன்தரக்கூடியவை. இதோட இலையின் சாறு மேக நோய்க்கு உகந்த மருந்து. தலைமுடியை கறுப்பாக மாற்றுது.

வேகமாக சாப்பிட்டால் உடல் குண்டாகும்


சிலர் சாப்பாட்டை வேக வேகமாக சாப்பிடுவார்கள். சிலர் ஆமை வேகத்தில் மெல்ல சாப்பிடுவார்கள். ஆனால் மெல்ல சாப்பிடுவதுதான் உடல் நலத்திற்கு நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது சம்மந்தமாக நியூசிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.

மீன் சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும்; ஆய்வில் தகவல்


மீன்களில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் உள்ளது. இந்த அமிலம் மனித உடலுக்கு நல்லது என்று ஏற்கனவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஒமேகா-3 அமிலம் மனிதனின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுவதாகவும் கண்டு பிடித்து உள்ளனர். இது தொடர்பாக நியூசிலாந்தின் மஸ்கே பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு நடத்தினார்க்ள.

ஏலக்காயின் மகிமை


இதோட தாவரவியல் பேரு, எலிட்டேரியா கார்டமோமமேட். இது பத்து அடி உயரம் வரை வளரக்கூடிய பலபருவச்செடி. இலைகள் பார்ப்பதற்கு வாள் போல இருக்கும். இவை போக்கு நரம்பமைப்புக் கொண்டவை. இதோட மலர்கள் தரையடித் தண்டில் இருந்து வெளிவருது. வெள்ளை நிறத்துல, இளஞ் சிவப்புக் கோடுகளோடு காணப்படுது.

படுக்கை அருகில் கம்ப்யூட்டரை வைக்காதீங்க..

ஆழ்ந்து அமைதியாக தூங்க முடிந்தால், மனிதன் இளமையாக இருப்பான். முதுமை அவனை நெருங்காது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்திற்கு கூட ஓய்வு அவசியமாகிறது.

கோடை வெயிலுக்கு ஏற்ற வெள்ளரிக்காய்: உடலை குளிர வைக்கும்


வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின்-சி!


விட்டமின்-சி அடங்கிய உணவுகளைப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதால்,இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்று தெரிய வந்துள்ளது.