Pages

Thursday, April 19, 2012

கசகசா

 கசகசா சில திண்பண்டங்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது. எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்.
ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மைபோல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும்.

வேம்பு

    வைரஸை எதிர்க்கக்கூடிய ஆற்றல் வேம்புக்கு உண்டு. இதனால்தான் வீட்டில் ஒருவருக்கு அம்மை ஏற்பட்டவுடன், அடையாளச் சின்னமாக மாறி மற்றவருக்கு நோய் தொற்றாமல் காக்கிறது.

நந்தியாவட்டையின் மருத்துவக் குணங்கள்:

    நந்தியாவட்டை ஒரு செடியினம். இதன் இலைகள் எதிரடுக்கில் அமைந்துள்ள கரும்பச்சை நிறமாகும். இதன் பூக்கள் வெந்நிறமாக இருக்கும். மலர் பல அடுக்கு இதழ்களையுடைய இனமும் காணப்படுகின்றன. வளமான எல்லா இடங்களிலும் வளரக் கூடியது.

கறிவேப்பிலையின் மருத்துவ குணம்


கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றோம், ஆனால் கறிவேப்பிலை பல அறிய மருத்துவ தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை,

கறிவேப்பிலை கீரை வகையை சேர்ந்தது இல்லை என்ற போதிலும் கீரைகளில் இருக்கும் அனைத்து சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்


நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் . இதை, 'கடவுளர்களின் மருந்து' என்று குறிப்பிடுவது உண்டு .

மாதுளையின் மருத்துவ குணம்


புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் மூன்று வகையான மாதுளை உண்டு .

குடல் அழற்சியை போக்கும் சக்தி புளிப்பு மாதுளைக்கு உண்டு. இது, உணவு செரிமானத்தை துரிதப்படுத்தும். மேலும், குடலில்
உருவாகும் இயல்பான மாற்றங்களையும் சரிசெய்யும் ஆற்றல் புளிப்புமாதுளைக்கு உண்டு.

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு


முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . வெள்ளைக்கருவில் 17கலோரியும், மஞ்சள்கருவில் 59 கலோரியும் உள்ளது . நாம் சமைக்கும் முறையைப்பொறுத்து, கலோரிகளின் அளவு கூடும் அல்லது குறையும் .

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க


வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
நெல்லிக்காயை பாலில்வேகவைத்து, கொட்டை நீக்கிவிட்டு மசித்து தலையில்தேய்த்து சிலநிமிடங்கள் கழித்து குளித்தால், கூந்தல் மிருதுவாகும்.

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்


இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில வற்றை காய வைத்து பத படுத்தி சாப்பிடலாம். அனைத்து பழங்களும் மருத்துவ குணம் கொண்டவையே . இதில் பாலைவன பகுதி மக்களுக்கு வர பிரசாதமாக இருப்பது இருப்பது பேரீச்சம்பழமாகும் .

வெள்ளைப்பூண்டின் மகத்துவம் மிக்க மருத்துவ குணங்கள்


வெள்ளைப்பூண்டை உணவில் அதிகம் சேர்ப்பவர்களுக்கு மலேரியா நோய் வராது. பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலில் தேவையற்று சேரும் கொழுப்பு குறையும். உடல் கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டுக்குள் இருக்க, தினமும் காலையில் 4 வெள்ளைப்பூண்டுத் துண்டுகளை சாப்பிடுவது நல்லது.

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்!


வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும்.

கற்பக மூலிகை துளசி….!



கற்பம் என்பது உடலை கல் போல ஆக்குவது. அப்படிப்பட்ட மூலிகைகள் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் துளசி பற்றி தெரிந்துகொள்வோம்.

துளசி (Ocimum sanctum) மூலிகைகளின் அரசியாக போற்றப் படுகிறது. துளசியை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்



பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.

வாயை சுத்தமாக, துர்நாற்றமின்றி வைக்க இதோ சில வழிகள்...


சாப்பிடும் போது ருசியாக இருக்கும் உணவு, வாயில் சிறிது நேரம் தங்கி விட்டால், துர்நாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. அதனால் சாப்பிட்டவுடன் பல் தேய்ப்பது நல்லது. இது பல் இடுக்குகளில் உள்ள உணவுப் பொருட்களை சுத்தம் செய்யும்.

காலை எழுந்தவுடன் பல் தேய்ப்பதைப் போல், இரவு படுக்கும் முன் பல் தேய்ப்பதும் முக்கியம்.

பாகற்காயின் மருத்துவ குணங்கள்



நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.
உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.