Pages

Wednesday, April 25, 2012

செம்பருத்தியின் மகிமை

இது இந்தியாவில் தோட்டங்களில் வளர்க்கப்படுது. வேலித் தாவரமாகவும் வளர்க்கிறாங்க. இதோட நுனி இலைகள் பற்கள் போன்ற அமைப்புடன் காணப்படும். ஒளிர் பச்சை நிறத்தில் இருக்கும்.இதோட இலைகள், வேர் மற்றும் மலர்கள் பயன்தரக்கூடியவை. இதோட இலையின் சாறு மேக நோய்க்கு உகந்த மருந்து. தலைமுடியை கறுப்பாக மாற்றுது.
இதோட வேர் இருமலைப் போக்கும். மலர் மொட்டுக்கள் ஆண்மை பலத்தை பெருக்கும். மலர்கள் குளிர்ச்சி தரும். இதழ்களின் வடிசாறு காய்ச்சலில் உள்ள தீவிரத்தைக் கட்டுப்படுத்தும்.

சிறுநீர் போக்கின் போது உண்டாகும் வலியைக் குணப்படுத்தும். செம்பருத்தியோட இளம் இதழ்களின் எண்ணெயுடன் சம அளவு ஆலிவ் எண்ணெயை கலந்து, தலை வழுக்கை போக தடவுவாங்க.

No comments:

Post a Comment