Pages

Wednesday, April 25, 2012

ஏலக்காயின் மகிமை


இதோட தாவரவியல் பேரு, எலிட்டேரியா கார்டமோமமேட். இது பத்து அடி உயரம் வரை வளரக்கூடிய பலபருவச்செடி. இலைகள் பார்ப்பதற்கு வாள் போல இருக்கும். இவை போக்கு நரம்பமைப்புக் கொண்டவை. இதோட மலர்கள் தரையடித் தண்டில் இருந்து வெளிவருது. வெள்ளை நிறத்துல, இளஞ் சிவப்புக் கோடுகளோடு காணப்படுது.


ஏலக்காய் ரொம்பவும் மணமாக இருக்கும். விதைகள் வயிற்று வலியைப் போக்க உதவுது. செரிமானத்தை ஊக்குவிக்குது. சிறு நீரகக் கல், மூச்சுக்குழல் அழற்சி, ஆஸ்துமா, நரம்புத்தளர்ச்சி, உடல் பலவீனம் போன்றவற்றை நீக்க பயன்படுத்தப்படுது. வாய்துர்நாற்றத்தைப் போக்குது.

ஏலக்காயில் எளிதில் ஆவியாகக்கூடிய போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலின், கெரியோபில்லென், கார்வோன், ïகேலிப்டோல், டெர்பினின், சேபினின், போன்ற எண்ணெய்கள் உள்ளன. இவை தான் இதோட மருத்துவக்குணங்களுக்கு எல்லாம் காரணமாம்.

No comments:

Post a Comment