Pages

Wednesday, April 25, 2012

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கொத்தமல்லி


எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதனுடைய விதை, இலை ரெண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. இதன் விதை, காரம், கசப்பு, துவர்ப்பு, இனிப்புன்னு நான்கு விதமான சுவைகளும் சேர்ந்த அற்புதக்கலவை.

சாப்பிடும் போது காரச்சுவை கொண்ட இது, செரிப்பற்கு முன்  இனிப்புச்சுவையா மாறி, குடல் பகுதியில எரிச்சலைத் தணிக்குது.
பசியையும், செரிமானத்தையும் தூண்டிவிடுற இதுல, நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை அதிகமா இருக்குது. கொத்தமல்லியை அதிகம் சாப்பிடுறவங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

ரத்தத்தைச் சுத்திகரிக்கும் தன்மையும் இதுக்கு உண்டு. இன்சுலின் சுரப்பைத் தூண்டுற ஆற்றல் இருக்குறதால, சர்க்கரை நோயைக் குறைக்கும் ஆற்றல் பெற்றது. ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலையைக் கழுவி, மிக்சியில போட்டு அரைகுறையாக அடிக்கணும்.

அதை அப்படியே வாயில் போட்டு ஒதுக்கி கொண்டால், ரெண்டு நாள்ல வாய்ப்புண் குணமாயிடும். வெயில்ல சுத்துறதால ஏற்படும் களைப்பு, மயக்கம், நீர்ச்சுருக்கு ஆகிய சிக்கல்களுக்கு கொத்தமல்லி நிவாரணம் தருது. 4 டம்ளர் தண்ணீர்ல ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையைப் போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்கணும். இப்படி செஞ்சா உடல் சூடு தணியும்; களைப்பும் காணாமல் போயிடும்

No comments:

Post a Comment