Pages

Thursday, April 19, 2012

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்


இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில வற்றை காய வைத்து பத படுத்தி சாப்பிடலாம். அனைத்து பழங்களும் மருத்துவ குணம் கொண்டவையே . இதில் பாலைவன பகுதி மக்களுக்கு வர பிரசாதமாக இருப்பது இருப்பது பேரீச்சம்பழமாகும் .



யுனானி, ஆயுர்வேதம் , சித்த மருத்துவம் போன்றவற்றில் பேரீச்சம் பழம் முக்கிய இடத்தை வகிக்கிறது. பேரீச்சம் பழத்தில் இரும்பு சத்து, கால்சியம், விட்டமின் ஏ, பி, பி2, பி5 , இ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம் ;

கண்பார்வை குறைபாட்டை குனபடுத்த சிறந்த மருந்து பேரீச்சம் பழமே, இதில் விட்டமின் 'ஏ' அதிகமாக உள்ளது , மாலைகண் நோயால் பாதிக்க பட்டவர்கள், தேனுடன் பேரீச்சம் பழத்தை கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வர உடலுக்குதேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். எனவே கண் பார்வைகோளாறுகள் நீங்கும்.

எந்த காரணமும் இன்றி உடல் இளைத்திருந்தாலும், அவர்கள் பேரீச்சம்பழத்தைத் தாராளமாகச் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்துக் கொள்வதால், மெலிந்த உடல் தேறும். போகக் களைப்பு நீங்கும். தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.

பேரீச்சம் பழத்தை கொட்டைநீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி காய்ச்சிய
பசும்பாலில் சேர்த்துக் கலந்து, தேன் 2 ஸ்பூன், ஏலக்காய்-3, குங்குமப்பூ-5 இதழ்
கூடடிக் கலந்து பருகலாம். இதற்கு இணையான ஒரு டானிக் கிடையாது. சிறுவர்,
இது ஒரு சத்துள்ள நல்ல டானிக்.

தினமும் இரவில் படுக்கசெல்லும் முன்னர் ஒருடம்ளர் காய்ச்சிய பசும் பால் மற்றும் இரண்டு பேரீட்ச்சம்_பழத்தினையும் உண்டுவந்தால் உடல் நல்ல பலம் பெறும். புதிய ரத்தம் உண்டாகும். தோல்பகுதிகள் வழுவழுப்பாகவும் , மிருதுவாகவும் இருக்கும்.



No comments:

Post a Comment