Pages

Wednesday, May 2, 2012

காலை உணவின் அவசியம்..!


காலையில் நாம் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது.எட்டு முதல் பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், உடலுக்கு மிக முக்கியமாக “பெட்ரோலாக” தேவைப்படும் உணவு இது ஆகும்  இப்போது உள்ள பெண்கள் உடல் ஒல்லியாக இருந்தால் தான் அழகு என்று நினைத்து சரியாக சாப்பிடுவதில்லை.


ஆனால் உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது இந்த காலை உணவுகளே ஆகும். காலை உணவு முறையை “பிரேக் பாஸ்ட்” என்று கூறுவர். “பாஸ்ட்”டை (உண்ணாதிருத்தலை) “பிரேக்” (துண்டிப்பது) பண்ணுவது என்று அர்த்தம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது.
அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது. சிலர் காலையில் சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிடலாம் என்று எண்ணுவர்  அது சரியல்ல. பத்து மணி நேரத்தையும் தாண்டி பட்டினி போடுவது, உடலில் உள்ள முக்கிய சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல்  செய்வதற்கு காரணமாகிறது.உடல் குறைபாடுகள் ஏற்பதுவதற்கு இதுவே முக்கிய காரணமாக அமைகிறது.

No comments:

Post a Comment