Pages

Saturday, April 21, 2012

அகத்தி கீரையின் மருத்துவம்


அகத்தி கீரை:- இது செஸ்பேனியா (Sesbania) என்ற இனத்தைச் சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர் செஸ்பேனியா கிராண்டிஃவுளோரா (Sesbania grandiflora) என்ப்தாகும். நமது அகத்தின் தீயை அகற்றுவதால் இது அகத்தி என்ற பெயர் பெற்றது.

.
ரத்த கொதிப்பு கட்டுபடுத்தும் அகத்தி கீரை :-அகம்+தீ+கீரை என்றால் பித்தம் போக்க கூடியது. இதில் வைட்டமீன்கள், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உயிர் சத்து, தாது பொருட்கள் அதிகமாக உள்ளது.

இளந்தாய்மார்கள் அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும்.

கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் சரியாகும்.

வைசூரி போன்ற நோய் குணமாக அகத்தி பட்டையை தண்ணீரில் காய்ச்சி வடித்துக் குடிநீராக குடிக்கலாம்

அகத்தி கீரையை அடிக்கடி சேர்த்து கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும்.

இந்த அக்த்தி கீரையானது வயிற்றில் இருக்கும் புழுவை நீக்கும். மலச்சிக்கலையும் நீக்கும்.

இந்த கீரையின் சாறில் 2 சொட்டு எடுத்து நமது மூக்கில் விட்டால் சுரம் போய்விடும்.

வாய்ப்புண், குடல்புண், தொண்டைப்புண் ஆகிறவற்றை இது நீக்கும்.

அகத்திகீரை தொடர்ந்து சாப்பிட்டால் மூளைக் கோளாறு சரியாகும்.

பீடி,சிகரெட், சுருட்டு, உக்கா ஆகியவற்றை பிடிப்பதால் உண்டாகின்ற விஷ சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும் சூட்டையும் இது அகற்றும்.

அகத்தி கீரையின் தீமைகள்-
வேறு மருந்து சாப்பிடும்போது இககீரையை சாப்பிட்டால் மருந்தின் வீரியம் குறைந்துவிடும். அதனால் மருந்து சாப்பிடும் காலங்களில் இந்த கீரையை சாப்பிடக்கூடாது.

இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டால் இரத்தம் கெட்டுப் போக வாய்ப்புண்டு. சொறியும், சிரங்கும் வரலாம். இரத்த சோகையும் வரலாம். வயிற்று வலியும் பேதியும் வரலாம்.

இது வாயு கோளாறை உருவாக்கும். அதனால் வாய்வுக் கோளாறு இருப்பவர்கள் இந்த கீரையை சாப்பிடக் கூடாது

No comments:

Post a Comment