கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு சென்று முறையுடன் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது, இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் கார்டியோ வாஸ்குலார் தொகுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. இதனால் குத்துச்சண்டை, பளுதூக்குதல் போன்ற கடினமானஉடற்பயிற்சிகளையும் எளிதாக செய்ய முடியும்.
காலையில் நாம் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது.எட்டு முதல் பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், உடலுக்கு மிக முக்கியமாக “பெட்ரோலாக” தேவைப்படும் உணவு இது ஆகும் இப்போது உள்ள பெண்கள் உடல் ஒல்லியாக இருந்தால் தான் அழகு என்று நினைத்து சரியாக சாப்பிடுவதில்லை.
சுவைக்காக மட்டுமின்றி வெங்காயம் வியக்கத்தக்க மருத்துவ ரீதியாகவும் பயன்படுகிறது. நன்கு வளர்ந்த வெங்காயம் சமையலில் எவ்வாறு உதவுகிறதோ அதேபோல வெங்காயச் செடியில் உள்ள பூக்களும் மனிதர்களின் நோய் போக்கும் மருத்துவ குணம் கொண்டவையாகும்.
வெங்காயத்தையும், வெங்காயப்பூவையும் சேர்த்து அரைத்து ஒரு அவுன்ஸ் சாறு எடுத்து இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காசநோய் குணமடையும்.
பாசிப்பயறு சத்தான பயறு வகைகளில் ஒன்றாகும். பண்டைய காலம் முதலே இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்த இந்த வகை பயறுகள், பின் தெற்கு சீனா, இந்தோ சீனா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் விளைவிக்கப்பட்டது.